மொட்டுக் கட்சியின் கூட்டங்கள் நிறுத்தம் !!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் நாடு முழுவதும் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த கூட்டத் தொடர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மூலம் அறிய முடிகிறது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் கூட்டத் தொடர் களுத்துறையில் ஆரம்பமானதுடன், நாவலப்பிட்டி மற்றும் ஆனமடுவ ஆகிய பிரதேசங்களில் நடைபெற்றன.
பல மாவட்டங்களிலும் கூட்டத் தொடரை நடத்துவதற்கான திகதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சந்தர்ப்பத்தில் பொதுஜன பெரமுனவின் அரசியல் கூட்டங்களை நடத்துவது பொருத்தமற்றது என்று கட்சியின் எம்.பிக்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரியவருகிறது.
முதலில் கட்சி உறுப்பினர்களைக் கவனித்து, கட்சியை ஒழுங்கமைத்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி தலைமையில் கூட்டங்களை நடத்துவதே சிறந்தது என்று எம்.பிக்கள் சுட்டிக்காட்டியதை அடுத்து, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
ஆளும் கட்சியின் பிரதம கொரடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்கவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை வெள்ளிக்கிழமை சந்தித்த போது இவ்விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளதாக தெரியவருகிறது.