யாழ் தென்மராட்சி பிரதேசத்திற்கு உட்பட்ட பாலாவி பற்றைக்காட்டுப் பகுதியில் இயங்கி வந்த சட்டவிரோத கசிப்பு நிலையம் முற்றுகை! (வீடியோ)
பல காலமாக யாழ் தென்மராட்சி பிரதேசத்திற்கு உட்பட்ட பாலாவி பற்றைக்காட்டுப் பகுதியில் இயங்கி வந்த சட்டவிரோத கசிப்பு நிலையம் முற்றுகை!
இதன் போது 1100 லீட்டர் கோடா மீட்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதுடன்,58 லீட்டர் ஸ்பிரிட் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், உற்பத்திக்கான உபகரணங்கள் அணைத்தும் மீட்க்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் தப்பியோட்டம், கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உதவி மதுவரி ஆணையாளர் றொசான் பெரேராவின் வழிநடத்தலில், ஆ.ராஜ்மோகன் வழிநடத்தலில், சாவகச்சேரி மதுவரி திணைக்களத்தினர் கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டு கைபற்றியுள்ளனர்.
தொடர் விசாரணையில் ஈடுபட்டுவரும் சாவகச்சேரி மதுவரித் திணைக்களத்தினர் சான்றுப் பொருட்களை எதிர்வரும் வெள்ளிக் கிழமை சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”