வழிபாட்டு உரிமை சட்டத்துக்கு எதிரான வழக்கு தள்ளிவைப்பு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு..!!
வழிபாட்டு உரிமை சட்டத்துக்கு எதிராக அஸ்வினி குமார் உபாத்யாயா, சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டோர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் உயர் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்க வேண்டி உள்ளதால், விசாரணையை டிசம்பர் முதல் வாரத்திற்கு தள்ளிவைக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்தார். மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல், ‘அடுத்த விசாரணை தேதிக்கு ஒரு வாரத்துக்கு முன்பு மத்திய அரசு பதில் மனுவை தாக்கல் செய்யும் பட்சத்தில் விளக்க மனு தாக்கல் செய்யப்படும்’ என தெரிவித்தார். வாதங்களை பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, டிசம்பர் 12-ந் தேதிக்குள் பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி முதல் வாரத்துக்கு தள்ளிவைத்தது.