பலாலி விமான நிலையத்தை திறக்க இந்தியா தடையில்லை!
பலாலி சர்வதேச விமான நிலையத்தினை இயக்குவதற்கு இந்தியா ஒருபோதும் தடையாகவில்லை என யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட துறைமுகங்கள் விமான சேவைகள் ராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர தெரிவித்தார். கடந்த வாரம் கடத்தொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா பலாலி விமான நிலையத்தை இயக்குவதற்கு இந்தியாவே தடையாக உள்ளது என தெரிவித்த கருத்து தொடர்பில் அமைச்சரிடம் வினவிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்,
சர்வதேச விமான நிலையமும் நமக்கு ஒரு வருமானத்தை ஈட்டக்கூடிய ஒரு விமான நிலையம் ஆகும் அந்த விமான நிலையமும் ஓரிரு மாதங்களில் விரைவில் செயற்படுத்தப்படும் கடற்தொழில் அமைச்சின் இந்தியா தான் அந்த விமான நிலையத்தினை செயல்படுத்துவதற்கு தடையாக இருப்பதாக என்ற விடயம்அது முதலில் அவ்வாறு பிரச்சனை இருந்தது ஆனால் எல்லாம் பேசி சமரச முயற்சியில் ஈடுபட்டு தற்பொழுது எல்லா விடயங்களும் நிறைவடைந்து விட்டன ஓரிரு மாதங்களில் பலாலி விமான நிலையசேவை ஆரம்பிக்கப்பட உள்ளது
அவ்வாறு ஆரம்பித்தால் இலங்கையில் உள்ள மூவின மக்களும் குறிப்பாக வடக்கு கிழக்கில் உள்ள மக்களுடன் ஒன்றிணைந்து இந்த நாட்டில் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும் ஆனால் இவை விரைவில் சாத்தியப்பட வேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.