;
Athirady Tamil News

கார்த்திகை மாதம் நாளை தொடக்கம் துளசி மாலை விற்பனை விறுவிறுப்பு..!!

0

கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மண்டல மகர விளக்கு பூஜையை முன்னிட்டு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 1-ந் தேதி முதல் 60 தினங்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதையொட்டி அய்யப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் 1-ந் தேதி அன்று மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்று அய்யப்பனை தரிசனம் செய்வார்கள். அதன்படி இந்த ஆண்டுக்கான கார்த்திகை 1-ந் தேதி நாளை (வியாழக்கிழமை) பிறக்கிறது.இதையொட்டி காலையில் பக்தர்கள் குளித்துவிட்டு சந்தனம்,குங்குமம் திலகமிட்டு கோவையில் உள்ள சித்தாபுதூர் அய்யப்பன் கோவிலுக்கு சென்று மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். இதற்காக கோவையில் உள்ள பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் துளசி மாலை மற்றும் முத்து மணி மாலைகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. அவற்றை பக்தர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர் அத்துடன் அய்யப்பனுக்கு பிடித்த கருப்பு சட்டை, வேட்டியையும் பக்தர்கள் வாங்கிச் சென்றனர். இதனால் கடைகளில் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. 60 நாட்கள் வரை சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறந்து இருக்கும் என்பதால், கோவையில் 2 மாதங்களுக்கு எங்கு பார்த்தாலும் அய்யப்ப சரண கோஷம் ஒலிப்பதை கேட்க முடியும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.