போதைப் பொருளுக்கு மீண்டும் அடிமையாகாதவாறு வாழ்வியலை மேம்படுத்தும் ஒரு வேலை திட்டத்தினை முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது!!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதைப் பொருட்களோடு கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை பார்வையிடவே இன்றைய தினம் சிறைச்சாலைக்கு வந்தேன் என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார் இன்றைய தினம் யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்
யாழ்ப்பாண சிறைச்சாலையில் போதைப்பொருள் பாவனை தொடர்பில் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 38 கைதிகளை சந்தித்து கலந்துரையாடினேன் குறிப்பாக அவர்கள் ஏன் இந்த போதை பொருளை பாவித்தார்கள் என்ன போதை பொருளை பாவித்தார்கள் போன்ற விடயங்களை அறிந்து கொண்டேன்
அத்தோடு மேலும் அவர்கள் இங்கிருந்து விடுதலையாகி சென்ற பின்பும் போதைப் பொருளுக்கு மீண்டும் அடிமையாகாதவாறு ஏதாவது ஒரு வாழ்வியலை மேம்படுத்தும் ஒரு வேலை திட்டத்தினை முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது அந்த வேலை திட்டத்தினை நாங்கள் விரைவாக ஆரம்பிக்க வேண்டும்
குறிப்பாக போதைப் பொருளோடு சம்பந்தப்பட்டு கைது செய்யப்படும் நபர் 3 தொடக்கம் ஆறு மாதங்களாவது சிறைச்சாலையில் இருக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது எனவே அவ்வாறான காலப்பகுதியில் அவர்கள் தங்களது வாழ்வியலை முன்னோக்கி கொண்டு போகக்கூடிய சில வேலை திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் நான் இன்று கலந்துரையாடினேன்
போதைப் பொருளோடு தொடர்புபட்டு யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை பற்றி ஆராய்வதற்காகவே இன்று யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.