கோண்டாவில் கிராம வாழ் பெண்களுக்கான தொழில் பயிற்சி மற்றும் தொழில் தெரிவு பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது !! (PHOTOS)
கோண்டாவில் வில் கழகத்தின் மூலமாக நேற்றைய தினம் (16.11.2022) கோண்டாவில் கிராம வாழ் பெண்களுக்கான தொழில் பயிற்சி மற்றும் தொழில் தெரிவு பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது .
இதில் வளவாளர்களாக தொழில் பயிற்சி அதிகார சபையின் சார்பாக திருமுருகன், நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கெளசலா சிவா மற்றும் நல்லூர் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் அமுதசுரபி ஆகியோர் கலந்து கொண்டு தொழில் பயிற்சி தொடர்பான விளக்கங்களை வழங்கினார்கள்.
*சமாதானம் , அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு தொடர்பான முன்னெடுப்புக்களில் பெண்களை வலுவூட்டும் திட்டமானது யாழ்ப்பாணம், அம்பாறை குருநாகல் ஆகிய மூன்று மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் Search for common ground உடன் அரசசார்பற்ற நிறுவனங்களான ஜெசாக் க்ராமீன் போன்ற நிறுவனங்கள் கூட்டாக செயல்படுகின்றன. குறிப்பாக பொருளாதார முன்னெடுப்பை எவ்வாறு நடைமுறை படுத்துவதென்பதை க்ராமீன் நிறுவனம் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.