;
Athirady Tamil News

பட்ஜெட் குறித்து இ.தொ.கா அதிருப்தி !!

0

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் (பட்ஜெட்) தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்களை சந்தித்து கலந்துரையாடியது.

இக்கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள பட்ஜெட்டில் மலையக மக்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி போதுமானதல்ல என இ.தொ.காவால் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும் மலையக மக்களுக்கு தேவையான கல்வி, சுகாதாரம், அபிவிருத்தி திட்டங்களுக்காக நிதி அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இ.தொ.கா முன்வைத்தது.

அதற்கு சாதகமாக பதிலளித்த ஜனாதிபதி அபிவிருத்தி திட்டங்களை அதிகரிப்பது சம்பந்தமாக எதிர்வரும் வாரங்களில் ஜனாதிபதி செயலகத்தில் இ.தொ.காவுடன் விசேட கூட்டம் நடத்தப்பட்டு, தேவையான அளவு நிதிரய அதிகரிப்பதாக தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.