இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் !!
தென்கிழக்கு வங்கக்கடலிலும் அதனை அண்டிய வடக்கு அந்தமான் கடற்பிராந்தியத்திலும் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (19) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றமடையலாமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து, நாட்டின் வடக்கு கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் அதிகம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால் வடக்கு மற்றும் கிழக்கு கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணிக்கு 60 கிலோமீட்டர் வரை அதிகரித்து வீசுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, காங்கேசன்துறை தொடக்கம் முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் 2 தொடக்கம் 3 மீட்டர் வரை கடல் அலைகள் மேல் எழலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.