கிளிநொச்சி கிராஞ்சி கிராமத்தில் 100 பயனாளிகளுக்கு விதைப்பொதிகள் வழங்கப்பட்டன!!! (படங்கள்)
உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி கிராஞ்சி கிராமத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 பயனாளிகளுக்கு பயன்தரு பழமரக்கன்றுகள் மற்றும் வீட்டுத் தோட்ட விதைப்பொதிகள் வழங்கப்பட்டன.
வேர் தேடும் விழுதுகள் அமைப்பின் ஏற்பாட்டில் கொடையாளர்களின் நிதிப் பங்களிப்பில் இந்த திட்டம் நேற்று சனிக்கிழமை நடைமுறைப்படுத்தப்பட்டது.
பூநகரி பிரதேச சபை உறுப்பினர் த,ஜெயசித்திரா தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் வேர் தேடும் விழுதுகள் அமைப்பின் இணைப்பாளர் கீர்த்தன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட இனைப்பாளர் அமுதன் பல்கழைக்கழக மாணவன் சனுசன் வேர் தேடும் விழுதுகளின் உறுப்பினர் சித்தி கிராஞ்சி பாடசாலை அதிபர் லதீஸ்குமார் மற்றும் கிராம அமைப்புக்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”