யாழ். குருநகரில் நடைபெற்ற சர்வதேச கடற்தொழிலாளர் தினம்!! (படங்கள்)
சர்வதேச கடற்தொழிலாளர் தினம் இன்று திங்கட்கிழமை (நவ.21) குருநகர் கடற்தொழில் சங்க மண்டபத்தில் வெகு சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.
குருநகர் கடற்தொழில் சங்க மண்டபத்தில், இடம்பெற்ற இந் நிகழ்வு, கடற்தொழில் அபிவிருத்தி சங்க தலைவர் பிரேமன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட செயலர் சுதர்சன், கடல்தொழில் நீரியல் திணைக்கள பிரதிபணிப்பாளர் சுதாகரன், குருநகர் பங்கின் உதவி பங்குத்தந்தை அருட்பணி தயதீபன், மற்றும் யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் சம்மேளன தலைவர் அன்னராசா, ஜே /69 கிராம சேவையாளர் சேந்தன், இலங்கை வங்கியின் பிராந்திய முகாமையாளரும் கடற்தொழில் திணைக்கள பரிசோதர்கள், உத்தியோகதர்கள், மக்கள் என பல தரப்பட்டோர் கலந்து சிறப்பித்தனர்.
மேலும், இந்த நிகழ்வில் காலநிலை மாற்றமும் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் எனும் கருப்பொருளில் விசேட தெளிவூட்டல் நிகழ்வும், கடல் தொழிலையே வாழ்வாதாரமாக கொண்டு தற்போது ஓய்வு நிலையிலுள்ள கடல்தொழிலாளர்களுக்கு கெளரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”