வயோதிபர்கள் நடைபாதைகள் பொதுப்பூங்காவிற்குள் சட்டவிரோத காணி அபகரிப்பு!! (படங்கள்)
வவுனியா குருமன்காட்டில் வயோதிபர்களுக்கு ஒதுக்கப்பட்ட நடைபாதைகள் பூங்காவிற்குள் அனுமதியற்றமுறையில் சட்டவிரோதமாக கட்டிடம் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கத்திற்கு அமைக்கப்பட்டு வருகின்றது. இதற்கான அனுமதியை நகரசபை தவிசாளர் வழங்கியுள்ளதாக தெரிவித்து குறித்த கட்டடம் அமைக்கப்பட்டு வருகின்றன.
கடந்த முறை இடம்பெற்ற சபை அமர்வில் குருமன்காடு வயோதிபர் நடைபாதைகள் பொதுப் பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட ஒரு பகுதியை முச்சக்கரவண்டி சாதிகள் சங்கத்திற்கு வழங்குவதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது எனினும் அதற்கான அனுமதிக்கு இன்னும் வழங்கப்படவில்லை இந் நிலையில் இன்று அப்பகுதியில் கட்டிடம் பொருட்கள் இறக்கப்பட்டு கட்டுமானப்பணிகள் இடம்பெற்று வருகின்றன. இதனைத் தடுத்து நிறுத்துமாறு அதனைச்சுழவுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும் கட்டிடம் கட்டுவதற்கான அனுமதியைப் பெற்றுக்கொளாளாமல் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்படும் கட்டிடப்பணிகள் உடன் தடுத்து நிறுத்துமாறு நகரசபைத் தவிசாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு இடம்பெற்று வரும் பணிகளை உடன் நிறுத்துமாறு உள்ளூராட்சி உதவி ஆணையாளரினால் உத்தரவு பிறப்பிகாகப்பட்டபோதும் நகரசபையினர் அங்கு தடை உத்தரவுகள் எதனையும் வழங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே வேளை கடந்த மாதம் திருநாவற்குளம் பகுதியில் இவ்வாறு அனுமதியற்றமுறையில் அமைக்கப்பட்ட பேருந்து உரிமையாளர்கள் சங்க கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.