;
Athirady Tamil News

பற்களில் மஞ்சள் கறைகளைப் போக்கும் வழிகள்!! (மருத்துவம்)

0

ஒருவரின் அழகை அதிகரித்துக் காட்டுவது சிரிப்பு தான்.

இப்படி சிரிக்கும் போது, பற்களானது மஞ்சள் நிறத்தில் இருந்தால், அவை பார்ப்போரின் மனதில் நம்மை பற்றி சற்று கெட்ட எண்ணங்களை உருவாக்கும்.

அதுமட்டுமின்றி, பற்கள் மஞ்சளாக மிகுந்த கறையுடன் இருந்தால், ஆசையாக முத்தம் கொடுக்க வரும் துணை கூட கொடுப்பதற்கு தயங்குவார்கள்.

சரி, இப்படி பற்கள் மஞ்சளாக இருப்பதற்கான காரணம் என்னவென்று தெரியுமா?

வாய் துர்நாற்றம்

பொதுவாக பற்கள் மஞ்சளாக காணப்படுவதற்கு வயது, பரம்பரை காரணிகள், முறையற்ற பல் பராமரிப்பு, அதிக அளவில் டீ மற்றும் காபி குடிப்பது, சிகரெட் பிடிப்பது போன்றவைகளே காரணங்களாகும்.

இதனால் பலர் தங்கள் பற்களை வெண்மையாக வெளிக்காட்ட, பல் மருத்துவமனைக்கு சென்று பணம் செலவழித்து ப்ளீச்சிங் செய்து வெள்ளையாக்குவார்கள்.

இப்படி செய்வதால், பற்கள் வெண்மையடையும் ஆனால் அதன் ஆரோக்கியம் குறைந்துவிடும்.

ஈறுகளில் இருந்து இரத்தக்கசிவு

எனவே உங்கள் பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை ஆரோக்கியமான வழிகளில் நீக்க சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து அதன்படி செய்து பற்களை வெண்மையுடன் வைத்துக் கொள்ளுங்கள்.

பேக்கிங் சோடா

பற்களை வெண்மையாக்குவதில் பேக்கிங் சோடா பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை 1/2 கப் குளிர்ந்த நீரில் கலந்து, தினமும் மூன்று முறை வாய் கொப்பளித்து வந்தால், பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறைகள் நீங்கிவிடும்.

எலுமிச்சை

எலுமிச்சை சாற்றில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து பற்களை தேய்க்கலாம் அல்லது எலுமிச்சையின் தோலைக் கொண்டு பற்களை தேய்த்து, பின் குளிர்ந்த நீரில் வாயை கொப்பளிக்கலாம். இதன் மூலமும் பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறைகள் நீங்கும்.

ஆப்பிள்

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன், பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறைகளும் நீங்கிவிடும். ஏனெனில் அதில் இயற்கையாக உள்ள அசிட்டிக் தன்மையானது, பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கிவிடும்.

உப்பு

அனைத்தையும் விட மிகவும் விலை மலிவில் கிடைக்கும் ஒரு பொருள் தான் உப்பு. இந்த உப்பைக் கொண்டு பற்களை தினமும் தேய்த்தால், பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் அகன்றுவிடும். அதே சமயம் உப்பை அளவாக பயன்படுத்த வேண்டும். ஏனெனில் அளவுக்கு அதிகமாக உப்பை பயன்படுத்தினால், அவை ஈறுகளையும், எனாமலையும் பாதித்துவிடும்.

ஆரஞ்சு தோல்

இரவில் படுக்கும் போது, ஆரஞ்சு தோலைக் கொண்டு பற்களை நன்கு தேய்த்துவிட்டு, வாயை அலசாமல் இரவு முழுவதும் ஊற வையுங்கள். இதனை அதில் உள்ள வைட்டமின் சி சத்தானது, வாயில் உள்ள கிருமிகள் மற்றும் நுண்ணுயிரிகளை அழித்து, பற்களை வலுவாகவும், வெள்ளையாகவும் வைத்துக் கொள்ளும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.