V8 ஜீப் கேட்ட இராஜாங்க அமைச்சர்?

சுகாதார இராஜாங்க அமைச்சர் டாக்டர் சீதா அரம்பேபொல V8 ஜீப் ஒன்றை கோரியதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை சுகாதார அமைச்சு மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் பயன்படுத்திய இரண்டு V8 ஜீப்கள் தற்போது அமைச்சின் மேலதிக செயலாளர்களால் பயன்படுத்தப்படுவதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
எனினும், சுகாதார இராஜாங்க அமைச்சர் டாக்டர் சீதா அரம்பேபொலவிற்கு குறித்த V8 ஜீப்பில் ஒன்றை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெளிவுபடுத்தியதுடன், அவர் வாகனத்தை கோரவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், இராஜாங்க அமைச்சருக்கு BMW வாகனம் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் செய்தியில் உண்மைத்தன்மை இல்லை என்றும், சீதா அரம்பேபொலவுக்கு அவ்வாறான வாகனம் வழங்கப்படவில்லை எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.