வனத்துறை அதிகாரி கழுத்தறுத்து படுகொலை..!!
தெலுங்கானா மாநிலம், கம்பம் மாவட்டம், குத்தி கோயா கோட்டா பகுதியை சேர்ந்தவர் சீனிவாச ராவ். இவருக்கு மனைவி, 1 மகன் உள்ளனர். இவர் வனத்துறை அலுவலராக வேலை செய்து வந்தார். இவரது எல்லைக்கு உட்பட்ட சந்துரு கொண்டல என்ற இடத்தில் மலைப்பகுதியில் ஏராளமான மலை வாழ் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். மழை கிராம மக்கள் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகின்றனர். ஒரு சிலர் வனப்பகுதியில் உள்ள மரங்களை வெட்டி கடத்தி சென்று விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. நேற்று வனப்பகுதியில் உள்ள மரங்களை சிலர் வெட்டி கொண்டு இருப்பதாக வனத்துறை அலுவலர் சீனிவாச ராவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சீனிவாச ராவ் சந்துரு கொண்டல வனப்பகுதிக்கு சென்று மரத்தை வெட்டிக் கொண்டு இருந்தவர்களை எச்சரிக்கை செய்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சீனிவாசராவை பிடித்து மரம் வெட்டும் கத்தியால் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை வனப்பகுதியில் வீசிவிட்டு தப்பி சென்றனர். வனத்துறை அலுவலர் கொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து கம்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சீனிவாச ராவ் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து வனத்துறை அலுவலரை கழுத்து அறுத்து கொலை செய்தவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.