பெங்களூருவில் தூய்மை பணியாளர்கள் 3,673 பேர் பணி நிரந்தரம்..!!
பெங்களூரு மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று அரசுக்கும், மாநகராட்சிக்கும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையும், தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில், பெங்களூரு மாநகராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களில் 3,673 பேரை முதற்கட்டமாக பணி நிரந்தரம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்மூலம் அந்த தூய்மை பணியாளர்களுக்கு மாதம் ரூ.17 ஆயிரத்தில் இருந்து ரூ.28,950 வரை சம்பளம் கிடைக்கும்.