யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருகின்றது!!
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த பொலிசார் உற்சாகமாக செயற்படவில்லை, உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பல முறைப்பாடுகள் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன அந்த குற்றச்சாட்டுகளை தான் முற்றாக நிராகரிப்பதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலைய உதவி பொறுப்பதிகாரி துஷிதா உப்புல் செனவிரத்தின தெரிவித்தார் இன்று யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்களுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்,
தற்பொழுது யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருகின்றது பாடசாலை மாணவர்கள் இளைஞர்கள் இந்த போதை பொருளை பாவிக்கிறார்கள் இந்த போதைப் பொருளினை வடக்கில் உள்ளவர்கள் யாழ் மாவட்டத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களால் விநியோகிக்கப்படுகின்றது விற்பனை செய்யப்படுகின்றது எனவே இந்த போதைப் பொருளை யார் கொண்டுவருகிறார்கள் யார் விற்பனை செய்கிறார்கள் என்ற விடயத்தினை நாங்கள் அறிந்து கொள்ள வேண்டும்
அதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு தேவை குறிப்பாக இங்கே பெண்கள் கூட போதை பொருளை பாவிப்பதாக நாங்கள் அறிகின்றோம் அவை நிறுத்தப்பட வேண்டும் இலங்கை பூராகவும் இந்த போதை பொருள் தடுத்து நிறுத்துவதற்கு போலீசார் மற்றும் முப்படையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்கள் யாழ்ப்பாணம் பொலிசாரும் இந்த போதை பொருள் பாவனையை நிறுத்துவதற்கு பல்வேறுபட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்கள் அந்த நடவடிக்கைக்கு யாழ் முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியமாகும்
நாங்கள் இன மதம் மொழி பாராது அனைத்தின மக்களுடனும் நாங்கள் சேவையாற்ற விரும்புகின்றோம் அண்மையில் உங்களுடைய பிரதேசத்தில் ஒரு பாடசாலையில் நடந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரை கைது செய்துள்ளோம் கைது செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தியுள்ளோம் சட்டம் என்பது அனைவருக்கும் ஒன்றுதான் அந்த சட்டத்தினை நாங்கள் யாரும் கையில் எடுக்கக்கூடாது அதை நிறைவேற்றுவதற்கு போலீசராகிய நாங்கள் செயல்படுகின்றோம் குறிப்பாகமுஸ்லிம் பகுதிகளில் இரவு நேரங்களில் விசிட ரோந்து நடவடிக்கை நாங்கள் செயல்படுத்த உள்ளோம் இந்த போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு குறிப்பாக எங்களுடைய எதிர்கால சமூகமாகிய இளம் பிள்ளைகளை போதைப் பொருள் பாவணையில் இருந்து மீட்பதற்கு முஸ்லிம் மக்களாகிய நீங்கள் உதவி புரிய வேண்டும் என தெரிவித்தார்.