போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துதல் தொடர்பான மாவட்ட மட்ட குழுக்கூட்டம்!! (படங்கள்)
தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் ஏற்பாட்டில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்று (25.11.2022) பிற்பகல் யாழ் மாவட்டச் செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.
போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை முறைகள், போதைப் பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைள் மற்றும் முற்பாதுகாப்பு நடவடிக்கைள், மாவட்ட மட்ட மற்றும் பிரதேச மட்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைளை அனைத்து திணைக்களங்களின் ஊடாகவும் கூட்டாக இணைந்து மேற்கொள்ளுதல், பொலிஸாரின் பொறுப்புக்கள், சட்ட ரீதியான தண்டனைகள் மற்றும் நடவடிக்கைள், புனர்வாழ்வு மையத்தை நிறுவுதல் உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
மேலும், இக் கலந்துரையாடலில் மாநகர முதல்வர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி, மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மத குருமார்கள், உள்ளூராட்சி அதிகார சபையின் கௌரவ தவிசாளர்கள், துறை சார் திணைக்கள அதிகாரிகள், முப்படையினர், பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”
யாழில் போதை பொருள் பாவனையை கட்டுப்படுத்த கல்வி திணைக்களத்தின் ஒத்துழைப்பு போதாது!!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருகின்றது!!