;
Athirady Tamil News

திருப்பதியில் பக்தர்களின் காணிக்கை தலைமுடி ரூ.47 கோடிக்கு ஏலம்..!!

0

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் விரதம் இருந்து திருப்பதிக்கு வந்து நேர்த்தி கடனாக தலைமுடி காணிக்கை செலுத்துவது வழக்கம். தரிசனத்திற்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களில் தினமும் 25 ஆயிரம் முதல் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்துகின்றனர். பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தலைமுடி தரம் வாரியாக பிரித்து சேகரித்து வைக்கப்படுகிறது. பின்னர் குறிப்பிட்ட அளவு முடி சேர்ந்ததும் ஏலம் விடப்பட்டு வருகிறது. நேற்று 21 டன் எடை கொண்ட தலைமுடி ஆன்லைனில் ஏலம் விடப்பட்டது. ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தலைமுடியை ரூ.47 கோடிக்கு ஆன்லைனில் ஏலம் எடுத்ததாக திருப்பதி தேவஸ்தான பொது மேலாளர் கிருஷ்ணா ரெட்டி தெரிவித்தார். திருப்பதியில் நேற்று 66,072 பேர் தரிசனம் செய்தனர். 25,239 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.23 கோடி உண்டியலில் காணிக்கையாக வசூலானது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.