;
Athirady Tamil News

தமிழ் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலான பேச்சுவார்தையாக மாற்றி அமைக்க வேண்டும் – எம்.கே சிவாஜிலிங்கம்!!

0

தமிழ்த்தேசியக் கட்சிகள் பேச்சுவார்தை என்ற மாயைக்குள் ஏமாந்து விடாது தமிழ் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலான பேச்சுவார்தையாக அதனை மாற்றி அமைக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 68 ஆவது பிறந்த தினம் இன்று சனிக்கிழமை வல்வெட்டித்துறையிலுள்ள தலைவர் பிரபாகரனின் வீட்டின் முன்பாக வெடிகொழுத்தி,எள்ளுப்பாகு வழங்கி கொண்டாட்டப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எந்த நோக்கத்திற்காக விடுதலைப்போர் ஆரம்பிக்கப்பட்டதோ அந்த நோக்கத்திற்காக தமது உயிர்களை ஈந்தவர்களை நினைவில் கொண்டு அதனை அடையக்கூடிய வகையில் சுதந்திரமான வாக்கெடுப்பு நடாத்தப்படவேண்டும் அதனை அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் நடாத்தப்படவேண்டும் தலைவர் பிரபாகரன் பிறந்த தினத்தில் திட சங்கர்ப்பமாக ஒரு இனம் தங்கள் தலைவிதியை தாங்களே நிர்வகிக்கின்ற உரிமையை நிலைநாட்டவேண்டும்.

இதற்கு வடக்கு கிழக்கு மாநிலங்களில் சர்வஜன வாக்கெடுப்பு புலம்பெயர் தமிழர்களும் பங்குபற்றகூடிய வகையில் நடாத்தடப்படவேண்டும் இதனைத்தான் பிரபாகரனின் 68 ஆவது பிறந்த தினத்தில் எடுத்துக்கூறவிரும்புகின்றோம். இதைவிடுத்து அரசாங்கம் தீர்வு தருவார்கள் ,போசுவார்கள் என்று ஏமாந்தது போதும் 75 சுதந்திர தினத்திற்கு முன்பாக தீர்வு காண்போம் எனக் கூறுவது ஏன் என்பது புரியவில்லை. இதில் தமிழ் தேசியக் கட்சிகள் ஏமாந்து விடக்கூடாது .தமிழ் மக்களின் தேவைகளை உணர்ந்து அதற்கான தீர்வுகளை பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை. நாங்கள் ஒன்றிணைவதே காலத்தின் தேவையாகவுள்ளது என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.