;
Athirady Tamil News

ரபி பருவகால பயிர் வகை உற்பத்தி அதிகரிப்பு- மத்திய வேளாண் துறை மந்திரி தகவல்..!!

0

தலைநகர் டெல்லியில் மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர், துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் இது குறித்து விளக்கம் அளித்த அவர் கூறியுள்ளதாவது: ரபி பருவகால பயிர் வகைகள் உற்பத்தி 358.59 லட்சம் ஹெக்டேர் அளவிற்கு உயர்ந்துள்ளது. கோதுமை உற்பத்தி 138.35 லட்சம் ஹெக்டேர் அளவில் இருந்து 152.88 லட்சம் ஹெக்டேர் அளவிற்கு அதிகரித்துள்ளது. அதாவது கோதுமை உற்பத்தி 14.53 லட்சம் ஹெக்டேர் அளவிற்கு உயர்ந்துள்ளது. இது கடந்த 4 வருடங்களில் இல்லாத மிகப்பெரிய உற்பத்தி அளவாகும். மண் ஈரப்பதநிலை, தண்ணீர் வசதி மற்றும் உரங்களின் கையிருப்பு போன்ற சாதகமான சூழ்நிலையால் வரும் நாட்களில் ரபி பருவகால பயிர் வகைகளின் உற்பத்தி மேலும் அதிகரிக்கும். நாடு முழுவதிலும் உள்ள 143 முக்கிய நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு கடந்த காலத்தைவிட 106 சதவீதம் அதிகமாக உள்ளது. நாடு முழுவதிலும் உரங்களின் கையிருப்பு நிலையும் திருப்திகரமாக இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.