கற்றல்காலம் முடிந்தால் வெளியேற வேண்டும் !!
தமது கற்றல் கால எல்லையை கடந்த 05 சதவீதமான மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்குள் தங்கியிருப்பதாகவும் அவ்வாறான மாணவர்களுக்கு எதிராக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து துணை வேந்தர்களுக்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பணிப்புரை விடுத்துள்ளது.
இது சட்டவிரோத செயல் என்று தெரிவித்த பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, மேற்குறிப்பிட்ட பணிப்புரையை விடுத்துள்ளார்.
தமது கற்றல் கால எல்லைக்குள் பட்டப்படிப்பை நிறைவு செய்யாத மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் தங்கியிருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
பட்டப்படிப்பை முடிப்பதற்கு 3 வருடங்கள் அவகாசம் வழங்கப்படுகின்ற போதிலும் அவ்வாறான மாணவர்கள், பல்கலைக்கழகத்தில் தங்கியிருப்பதால் செலவீனங்கள் அதிகரிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பல்கலைக்கழகத்துக்குள் நுழையும் மாணவர்களுக்கு அவர்களின் கற்றல் காலப்பகுதியில் கற்பித்தல், விடுதிகள், நீர், மின்சாரம், கற்பித்தல் போன்ற வசதிகளை அரசாங்கம் வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
எனவே, தமது கால எல்லைக்குள் பட்டப்படிப்பை நிறைவு செய்யாவிடின், அவற்றுக்கான செலவீனங்களை அவர்களே பொறுப்பெடுக்க வேண்டும் எனவும் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.