புதிதாக 343 பேருக்கு தொற்று- கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து சரிவு..!!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 388 ஆக இருந்தது. இன்று பாதிப்பு 343 ஆக குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 71 ஆயிரத்து 562 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் இருந்த 471 பேர் நேற்று குணமாகி உள்ளனர்.
இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 35 ஆயிரத்து 687 ஆக உயர்ந்துள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 5,263 ஆக சரிந்துள்ளது. இது நேற்றை விட 132 குறைவு ஆகும். கொரோனா பாதிப்பால் நேற்று மகாராஷ்டிராவில் ஒருவர் இறந்துள்ளார். கேரளாவில் விடுபட்ட பலிகளில் 3-ஐ கணக்கில் சேர்த்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30,612 ஆக உயர்ந்துள்ளது.