கைதிகளால் நிரம்பி வழியும் சிறைகள்!!
நாட்டிலுள்ள சிறைச்சாலைகளின் உச்சபட்ச கொள்ளளவை விட இரண்டு மடங்கு கைதிகள் சிறைச்சாலைகளில் உள்ளனர் என்று சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியிலுள்ள சிறைச்சாலைகளில் அதிகபட்சமாக 13,200 கைதிகளை மாத்திரமே சிறைவைக்க முடியும் என்ற போதும் தற்போது சுமார் 26,000 பேர் சிறை வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
இவர்களில் 65 சதவீதத்துக்கும் அதிகமானோர் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் சிறையில் இருப்பவர்கள் என்று சிறைச்சாலை திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தவருடம் ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில், மொத்த சிறைக்கைதிகளில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் போதைப் பொருள் குறித்த குற்றச்சாட்டில் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு குற்றச்சாட்டுக்கள் காரணமாக இந்த ஆண்டு சிறைக்குச் செல்லும் கைதிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை (25) வெளியான தரவுகளுக்கு அமைய சுமார் 26,000 கைதிகள், நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் சிறைவைக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.