;
Athirady Tamil News

தேசிய ரீதியில் வடமாகாணம் யூடோ விளையாட்டில் பதக்கம் வென்று சாதனை!! (PHOTOS)

0

வடக்கு மாகாணம், யூடோ விளையாட்டு துறை வரலாற்றில் முதல் முறையாக தேசிய ரீதியில் முதலாவது பதக்கத்தை வடக்கு மாகாணம் வென்றுள்ளது.
இலங்கை தேசிய யூடோ சம்மேளனம் நடாத்திய போட்டியில், முல்லைதீவு அளம்பில் பகுதியை சேர்ந்த ஜெயதாஸ் அல்வின் தேசிய ரீதியிலான யூடோ விளையாட்டில் வெள்ளி பதக்கத்தினை வென்று முதல் முறையாக வரலாற்றுச் சாதனை படைத்து எமது வடமாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
பொலநறுவை மாவட்டத்தில் தேசிய ரீதியில் நடைபெற்ற இப்போட்டியில், முப்படை வீரர்கள் மற்றும் தென்கிழக்கு வீரர்களுடன் 100 கிலோகிராமிற்குட்பட்ட எடை பிரிவில் போட்டியிட்டு வடக்கு மாகாணம் வரலாற்றில் தேசிய ரீதியில் முதலாவது யூடோ பதக்கத்தை வென்று பெருமை சேர்த்துள்ளது.

யூடோ பயிற்றுவிப்பாளரான வவுனியா மாவட்டத்தை சேர்ந்த எம்.எஸ்.நந்தகுமார் கருத்து தெரிவிக்கையில், இலங்கை தேசிய யூடோ சம்மேளனம் ஆரம்பிக்கப்பட்டு பல தசாப்தங்களாகியிருந்தும் இதுவரை தேசிய மட்ட ரீதியில் நடாத்த பட்ட யூடோ போட்டியில் வட மாகாணத்தில் இருந்து ஒரு வீரனும் பதக்கம் பெற்றிருக்கவில்லை, வடக்கு மாகாண யூடோ விளையாட்டு வரலாற்றில் முதல் முறையாக முல்லைத்தீவு மாவட்ட யூடோ சங்கத்தின் சார்பாக தனது பயிற்றுவிப்பினூடாக அவரது அதீத திறமையால் இவ் வெற்றியினை வென்ற வீரனுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.