;
Athirady Tamil News

புலிகளின் மூன்று எலும்புக்கூடுகள் மீட்பு !!

0

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார்கட்டு குரவில் பகுதியில் விடுதலைப்புலிகளுடையது என இனம் காணப்பட்ட மனிதர்களின் முன்று வகையான எலும்பு எச்சங்கள் இன்று 30.11.22 மீட்கப்பட்டுள்ளன.

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடையார் கட்டு குரவில் கிராமத்தில் தனியார் ஒருவரின் காணியினை பண்படுத்தும் போது கடந்த 20.11.22 அன்று மனித எச்சங்கள் இனம் காணப்பட்டுள்ளன.

இது குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தினால் நீதிமன்றில் பதிவுசெய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய இன்று 30.11.22 தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் சட்டவைத்திய அதிகாரி றொகான் தடையவியல் பொலீசார்,கிராம அலுவலகர்,பொலிஸார் ஆகியோர் முன்னிலையில் தோண்டப்பட்டுள்ளது.

இதன்போது முன்று வகையான மனித எச்சங்களின் மாதிரிகள் மீட்கப்பட்டுள்ளதாக சட்டவைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

நிலத்தில் தறப்பாளால் சுற்றப்பட்ட நிலையில் இவை மீட்கப்பட்டுள்ளன.

மனித எச்சங்களுடன் துப்பாக்கி ரவைகள் மற்றும் உடைகள், என்பன காணப்பட்டுள்ளன விடுதலைப்புலிகளின் சயனட்,இலக்கத்தகடு என்பனவும் இதன்போது குறித்த பகுதியில் இருந்து மீட்னப்பட்டுள்ளன.

அதில் ஒரு சயனைட் முழுமையாகவும் மற்றைய இரட்டை சயனட்டுகள் பாதியாகவும் காணப்பட்டுள்ளதுடன் செபமாலை ஒன்றும் இலக்கத்தகட்டில் (ஞ) என இலக்கம் தொடங்குகின்றது

ஜீன்ஸ்,சேட் மற்றும் பெண்களின் உள்ளாடையுடன் ஒரு எச்சமும்,மற்றுமோர் எச்சம் சிறுவர்களுடையது என்றும் மற்றும் ஒன்று பெரியவரின் உடையது எனவும் இனம் காணப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் எறிகணை ஒன்றின் ஒரு பகுதியும் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட மனித எச்சங்களை சட்டவைத்திய அதிகாரி மரபணுசரிசோதனையின் பின்னர் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிபதி பணித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.