அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு!!
அரச நிறுவனங்களில் ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ வாகனங்களின் உரிமையை மாற்றுவது உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரச நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ வாகனங்களின் உரிமையை மாற்றுவது குறித்து பொது நிறுவனங்களுக்கான குழு கவலை தெரிவித்ததை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக வாகனங்களை இறக்குமதி செய்வதையும் அரசாங்கம் கட்டுப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.