;
Athirady Tamil News

வயிற்றில் வளரும் குழந்தையை Scanning செய்வது சரியா தவறா? (மருத்துவம்)

0

திருமணம் என்பது ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கைக்கும் முழுமையான அர்த்தத்தை தரும் ஓர் உன்னதமான நிகழ்வாகும். அந்த திருமணத்திற்கு நிறைவான அழகையும் அர்த்தத்தையும் கொடுப்பது குழந்தைப் பேறாகும். ஆமாம் இப்போது பெரும்பாலான இளம் தம்பதிகள் தங்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தைகள் தொடர்பில் அதிகம் அக்கறை செலுத்தி வருகின்றனர்.

அந்த வரிசையில் வயிற்றில் வளரும் தங்களது குழந்தையை Scan செய்து பார்பதிலும் பலரும் ஆவலாக இருக்கின்றார்கள். இதற்கு மத்தியில் இருக்கும் இன்னுமொரு முக்கியமான விடயம் Scan செய்வது நல்லதா கெட்டதா என்ற குழப்பமாகும். இது இன்று பெரும்பாலான தம்பதிகளிடம் இருக்கும் பெரியதொரு கேள்வியாக அமைந்து விடுகின்றது. அது பற்றிய ஒரு விளக்கத்தினையே நாம் இப்பகுதியின் வாயிலாக தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

திருமணம் முடித்த பெரும்பாலான தம்பதிகள் Scan செய்து பார்ப்பதால் குழந்தைக்கோ அல்லது தாயிக்கோ ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா? ஒரு தடவை Scan செய்து விட்டால் அதன் பின்னர் வைத்தியரை சந்திக்கச் செல்கின்ற ஒவ்வொரு தடவையும் Scan செய்து பார்க்க வேண்டுமா? அதில் உண்மை தன்மை உள்ளனவா? போன்ற பல்வேறு சந்தேகங்களுடனும் அச்சத்துடனும் தான் இருக்கின்றார்கள்.

இளம் தம்பதிகளே Scanning செய்து கொள்வதால் உங்கள் குழந்தைகளுக்கோ அல்லது உங்களுக்கோ எந்த பிரச்சினையும் ஏற்பட போவதில்லை!

ஆமாம், இன்று உங்கள் வயிற்றில் வளரும் குழந்தைகளின் வளர்ச்சி வீதம் அவர்களின் ஆரோக்கியம் என்பனவற்றை அறிந்து கொள்வதற்கும், அதற்கேற்றவாறு உங்களுக்கு சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதற்கும், குழந்தை பிறப்பதற்கான திகதிகளை நீங்கள் முன்கூட்டியே அறிந்து கொள்வதற்கும், அதற்கேற்றவாறு உங்களை நீங்கள் தயார்படுத்திக் கொள்வதற்கும் Scanning முறை பெரிதும் உதவுகின்றது.

எந்த விதமான கதிர்வீச்சு முறையும் இந்த Scanning முறையில் பயன்படுத்துவதில்லை என்பதனால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு எவ்விதமான பாதிப்புகளும் ஏற்பட போவதில்லை.

சரி இந்தளவுக்கு நன்மைகளை கொண்ட இந்த Scanningஐ கருத்தரித்து எத்தனை மாததிற்குப் பின்னர் செய்து கொள்ளலாம்? என்று நீங்கள் கேட்பது புரிக்கின்றது. ஆமாம் கருத்தரித்து மூன்று மாதங்கள் நிறைவடைந்த பின்னர் கட்டாயமாக Scan செய்து கொள்ள வேண்டும். அப்போது தான் உங்கள் குழந்தையின் வளர்ச்சிப் படி நிலைகளை கணக்கிட்டு உங்களுக்கான பிரசவ திகதியினை நீங்கள் முன் கூட்டியே அறிந்து கொள்வதற்கு அது வாய்ப்பாக இருக்கும்.

அதனை தொடர்ந்து ஐந்து மாதங்கள் நிறைவடைந்ததும் இரண்டாவது Scanஐ செய்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும். காரணம் குழந்தையின் தலை, மார்பு, வயிறு உள்ளிட்ட உடலுறுப்புகள் அனைத்தும் சரியான முறையில் வளர்ச்சியடைந்திருக்கின்றதா? அவற்றுள் ஏதேனும் குறைபாடுகள் உள்ளவனவா என்பதை கண்டறிந்து கொள்வதுடன், குழந்தை ஆரோக்கியமாக இருக்கின்றதா? இல்லையா? போன்ற பல்வேறு அம்சங்களையும் இந்த Scanning முறையின் மூலம் தான் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

அதன் பின்னர் எட்டு மாதங்கள் நிறைவடைந்த பின்னர் வேண்டுமானால் இன்னுமொரு Scanning செய்து கொள்ளலாம். பெரும்பாலும் அதனை வைத்தியர்களே தீர்மானிக்கின்றார்கள். அது உங்களதும் உங்கள் வயிற்றில் வளரும் குழந்தையினதும் ஆரோக்கியத்தை கருத்திற் கொண்டு தான் தீர்மானிக்கப்படுகின்றது. எனவே நீங்கள் வைத்தியரை சந்திக்கச் செல்லும் ஒவ்வொரு தடவையும் Scan செய்து கொள்ள வேண்டும் என்றில்லை.

எனவே Scanning முறை உங்கள் வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு வழிசமைக்கும். அதன் வளர்ச்சி நிலைகளை அறிந்து கொள்வதற்கு முக்கியமான ஒன்றாக தான் நடைமுறையில் கருதப்படுகின்றது. நீங்கள் உங்களின் தேவைக்கு ஏற்ப அதனை செய்து கொள்வதால் எந்த தீமைகளும் இல்லை என்பதே எங்களின் கருத்தாக இருக்கின்றது. எனவே உங்கள் வயிற்றில் வளரும் குழந்தையை Scanning செய்வது சரியா? தவறா? என்று கேட்டால் சரியான அணுகுமுறைகளுடன் சரியான வைத்தியர்களின் ஆலோசனையுடன் அதனை செய்து கொள்வது சரி என்பதே பொருத்தமான பதிலாக அமைகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.