;
Athirady Tamil News

பால் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்!!

0

உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிக்க அவசியமான சிறு, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டத்தை தயாரிக்கும் நோக்கில் இந்திய தேசிய பால்பண்ணை மேம்பாட்டுச் சபையின் பல்துறை குழுவுடன் இணைந்து செயற்படுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாட்டின் அரச மற்றும் தனியார் துறை பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பால்மா பாவனையை குறைப்பதற்காகவும் உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காகவே குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

சிறு, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டத்தை தயாரிக்கும் நோக்கில் இந்திய தேசிய பால்பண்ணை மேம்பாட்டுச் சபையின் பல்துறை குழுவுடன் இணைந்து செயற்படுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரச மற்றும் தனியார் துறை பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளார்.

இந்தவிடயம் தொடர்பில், இந்தியாவின் தேசிய பால்பண்ணை மேம்பாட்டுச் சபையும், இந்தியாவின் அமுல் பால் நிறுவனமும் இணைந்து திரவப் பால் உற்பத்திக்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கான ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தை நேற்று (05) காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

அத்துடன், நீண்டகால திட்டத்தினூடாக இலங்கையை பால் உற்பத்தியில் தன்னிறைவடையச் செய்வதே இதன் பிரதான நோக்கம் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.