வேலை செய்த வீட்டில் ரூ.35 லட்சம் திருடிய பெண்..!!
பெங்களூரு ஜே.பி.நகர் பகுதியை சேர்ந்தவர் அகர்வால். இவர் அந்த பகுதியில் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் அவர் தனது தாயை வீட்டில் இருந்து கவனித்து கொள்வதற்காக விமலா என்ற பெண்ணை வேலைக்கு சேர்த்தார். அந்த பெண் கடந்த மாதம் 9-ந் தேதி வேலையில் சேர்த்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று அகர்வால், வீட்டில் இருந்து கடைக்கு சென்றார். பின்னர், இரவு வந்து பார்த்தபோது வேலைக்கார பெண் விமலா மாயமாகி இருந்தார். மறுநாள் காலையில் வீட்டில் இருந்த ரூ.35 லட்சம் நகை-பணமும் மாயமாகி இருந்தது தெரியவந்தது. அப்போது தான் வேலைக்கார பெண் விமலா நகை-பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர் உடனடியாக ஜே.பி.நகர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், சம்பவம் நடந்த வீட்டில் சோதனை நடத்தி வேலைக்கார பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர். பெங்களூருவில் கடந்த 3 மாதங்களில், வேலை செய்த வீடுகளில் வேலைக்காரர்கள் திருட சம்பவங்கள் அதிகரித்துள்ளது.