காற்றழுத்த தாழ்வு புயலாக மாறும் சாத்தியம்!!
திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 320 கிலோமீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து இன்று மாலை படிப்படியாக புயலாக மாறும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இந்த புயலானது நாளைய தினத்துக்குள் வடதமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேசத்தின் கடற்கரைகளை நெருங்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.