எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்படாது !!
பெரும்போகத்திற்குத் தேவையான உர விநியோகம் இடம்பெற்றுள்ளதாக விவாதத்தில் கலந்து கொண்ட அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின் 12ஆவது நாளான நேற்றைய (06) உரையாற்றிய அமைச்சர் மஹிந்த அமரவீர, பண்டி உர விநியோக நடவடிக்கை நேற்று ஆரம்பிக்கப்பட்டது.
எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்பட மாட்டாது. சோள உற்பத்தியாளர்களுக்கும் உரம் வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு 20 ஆயிரம் ரூபா பெறுமதியான சேதனப் பசளையும் விநியோகிக்கப்படுகிறது.
ஒரு ஹெக்டெயரை விட குறைந்த நிலங்களுக்கான உர விநியோகம் இலவசமாகும். அறுவடைக் காலப்பகுதியில் எரிபொருள் இலவசமாக வழங்கப்படவிருக்கிறது. நெல்லின் விலை தொடர்பில் சிக்கல்கள் காணப்படுவதாகவும் கூறினார்.