;
Athirady Tamil News

துமகூருவில் 1,000 ஏக்கரில் தொழிற்பேட்டை; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு..!!

0

பா.ஜனதா அலுவலகம் துமகூரு குலூரில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு அந்த அலுவலகத்தை திறந்த வைத்து பேசியதாவது:- பெங்களூருவுக்கு அடுத்தபடியாக துமகூரு மாவட்டம் வளர்ந்து வருகிறது. துமகூருவில் 1,000 ஏக்கர் பரப்பளவில் தொழிற்பேட்டை அமைக்கப்படுகிறது. இங்கு சிறப்பு பொருளாதார மண்டலமும் நிறுவப்படுகிறது. ராணுவ தளவாடங்கள் உற்பத்தியும் இங்கு நடைபெற உள்ளது. விவசாயிகளின் குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்தில் வித்யாநிதி என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 10 லட்சம் விவசாயிகளின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற்றுள்ளனர். தொழிலாளர்கள், நெசவாளர்கள், மீனவர்களின் குழந்தைகளுக்கும் இந்த திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளோம். உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த மக்களை பொருளாதார ரீதியாக பலப்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். தலித் மற்றும் பழங்குடியினருக்கு கல்வி, வேலை வாய்ப்பில் வழங்கப்படும் இட ஒதுக்கீட்டு அளவை உயர்த்தியுள்ளோம். இதன் மூலம் அந்த சமூகங்களின் குழந்தைகள் அதிகளவில் பயன் பெறுவார்கள். இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.