நாளை பாடசாலை மூடுவது தொடர்பில் தீர்மானிக்க கோரிக்கை!
வளிமண்டல சூழலை கருத்தில் கொண்டு நாளை வெள்ளிக்கிழமை (09) பாடசாலை நடாத்துவது தொடர்பாக கல்வி அமைச்சு முடிவெடுக்க வேண்டுமென இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கல்வி அமைச்சருக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர், சரா.புவனேஸ்வரன் அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக் கடிதத்தில்,தற்போது நாடு முழுவதும் வளிமண்டலம் மோசமாக உள்ளது. மலையக பிரதேசங்களில் பலத்த சூறாவளியுடன் குளிந்த காலநிலையும் மாறியுள்ளது. வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் மிகையான குளிருடன் மழையும், அச்சுறுத்தலான தூசுகள் நிறைந்த காற்றும் வீசும் என ஆளுநர்களாலும் எச்சரிக்கப்பட்டுள்ளதால் நாளை வெள்ளிக்கிழமை (09) பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு போக்குவரத்து என்பவற்றில் கவனம் செலுத்தி பாடசாலைகளை நடாத்துவது தொடர்பாக அவசர தீர்மானம் எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாளை வெள்ளிக்கிழமையும் இன்று வியாழக்கிழமை மாதிரியான சூழ்நிலை நிலவுமாக இருந்தால் மாணவர்களை பெற்றோர்கள் பாடசாலைக்கு அனுப்புவதில் அச்சம் கொள்வர். ஆகையால் நாளை வெள்ளிக்கிழமை பாடசாலைகளை மூடுவதே பொருத்தம் என பலரும் கருதுவதால் பொருத்தமான முடிவினை அறிவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் – என்றுள்ளது.