சித்திரப்போட்டியும் மாபெரும் கண்காட்சியும்..!!
யாழ்ப்பாணப்பல்கலைக்கழக, பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவத்துக்கான நிலையம் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித்திட்டத்துடன் (UNDP) இணைந்து இலங்கையில் பொருளாதார நெருக்கடியானது ஆண், பெண் பால்நிலைகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் என்னும் தலைப்பில் மாபெரும் கண்காட்சிக்கான சித்திரப்போட்டியை நடாத்துகின்றது.
பொருளாதார நெருக்கடியின் போது வன்முறைகள், உணவுப் பற்றாக்குறை, வறுமை, போக்குவரத்துச் சிரமங்கள், அதிகரித்த வேலையின்மை, கல்வி ஆரோக்கியம்,
ஊட்டச்சத்து, பாலின ஒப்புரவு, சமத்துவம், விவசாயம் வீட்டுத்தோட்டம், வெளிநாட்டு நாணயப் பற்றாக்குறை, மற்றும் உள்ளூர் நிர்வாகம் போன்ற உபகருப்பொருள்களில் சித்திரங்களை வரைய முடியும்.
வரைதல் மேற்பரப்பினை விருப்பத்திற்கு ஏற்ப குறந்தபட்சம் 11.7 X 16.5 அங்குலம் (A3) (29.7 X 42.0 செ.மீ) அல்லது அதிகபட்சம் 100 செ.மீ X 100 செ.மீ.)பயன்படுத்தலாம்.
இலங்கையின் எப்பகுதியில் இருக்கும் எவரும் இப்போட்டியில் பங்குபற்றலாம் வயதெல்லை கிடையாது. பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள், பொதுமக்கள் என எவரும் சித்திரங்களை வரைந்து நேரடியாகவோ, தபால் மூலமாகவோ பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவத்துக்கான நிலையம், இரண்டாம் மாடி, சுகாதார நிலையம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், தபால்ப்பெட்டி இலக்கம் 57, திருநெல்வேலி, யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் மார்கழி மாதம் 30ம் திகதிக்கு முன் சமர்ப்பிக்கலாம்.
பாடசாலை மாணவரின் பெயர், பாடசாலை, தரம் மற்றும் தொடர்பு விபரங்கள் அதிபர் அல்லது வகுப்பு ஆசிரியரால் உறுதிப்படுத்தப்பட வேண்டும். 18 வயதிற்கு மேற்பட்ட உயர்கல்வி மாணவரின் பெயர், துறை மற்றும் தொடர்பு விபரங்கள் நிறுவன ஆசிரியர் அல்லது துறைத்தலைவரால் உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஏனையவர்கள் தங்கள் தொழில்வழங்குநர் அல்லது பிரதேச செயலர் மூலம் உறுதிப்படுத்தலாம்.
சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து சித்திரங்களும் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும். ஒவ்வொரு வகையிலும் முதல் மூன்று இடங்களுக்கு வெற்றிக்கேடயங்கள் வழங்கப்படும். முதல் 50இடங்களுக்கும் முதன்மைச்சான்றிதழ்கள் வழங்கப்படும்.பங்குபற்றியோர் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.அதி சிறந்த சித்திரம் பொது இடமொன்றில் சுவரோவியமாக வரையப்படும.பத்துச் சிறந்த சித்திரங்கள் புகைப்படச் சட்டங்களில் வடிவமைக்கப்பட்டு அரச திணைக்களங்களில் காட்சிப்படுத்தப்படும்.