இரவு வீசிய கடும் காற்று மற்றும் மழை காரணமாக நீர்வேலியில் வாழைச் செய்கையாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.!! (PHOTOS)
நீர்வேலியில் வியாழக்கிழமை(08) இரவு வீசிய கடும் காற்று மற்றும் மழை காரணமாக வாழைச் செய்கையாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகளவில் வாழை தோட்டங்கள் நிறைந்த நீர்வேலி,நவக்கிரி மற்றும் கோப்பாய் ஆகிய பகுதியில் ஏற்பட்ட கடும் காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலையினால் வாழை மரங்கள் வாழை குலையுடன் முறிந்து விழுந்து உள்ளதாக வாழைத்தோட்ட உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் புயலாக மாற்றமடைந்துள்ளதனால் வடக்கு கிழக்கு பகுதிகளில் கடும் காற்றுடன் கூடிய மழையுடனான சீரற்ற காலநிலை நிலவிவருகிறது.
வாழை மரங்கள் அடியோடு முறிந்து விழுந்துள்ளன. இதனால் ஒவ்வொரு செய்கையாளர்களுக்கும் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதோடு வாழ்வாதாரத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
வாழைகள் முறிந்து விழுந்துள்ளதால் தமக்கு அரச அதிகாரிகள் நஷ்ட ஈட்டினை பெற்று தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.