50 ரூபாய்க்கு முட்டை!!
முட்டை ஒன்றை 50 ரூபாவுக்கு வழங்குவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளதாக வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
விலங்கு தீவனங்களின் விலைகள் தற்போது குறைந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் அந்த விலைகள் மேலும் வீழ்ச்சியடையும் என விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் முட்டை உற்பத்தியாளர்களுக்கு குறைந்த வட்டி வீதத்தில் கடனுதவி வழங்குவதன் ஊடாக அவர்களின் செலவினங்களை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் நளின் பெர்னாண்டோ அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.