ரணிலின் அதிரடி உத்தரவு – பல்கலையில் நடைமுறையாகும் கடுமையான சட்டங்கள்!!
பல்கலைக்கழகங்களில் பகிடிவதை தொடர்பில் பொறுப்பான திணைக்களங்கள் மௌனமாக இருப்பது தமக்கு ஆச்சரியமளிப்பதாக சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத்திட்டமும் நாட்டின் எதிர்காலமும் என்ற தலைப்பிலான விசேட மாநாட்டில் உரையாற்றிய போதே மேற்கொண்டவாறு அதிபர் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“பல்கலைக்கழகங்களில் பகிடிவதைகளை ஒழிப்பதற்காக கடுமையான சட்டங்களை உடன் நடைமுறைப்படுத்த வேண்டும்.
Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக நாட்டின் இளைஞர்களுடனான மாநாட்டில் அண்மையில் கலந்துக்கொண்டேன். பகிடிவதைகள் என்பது ஒரு உரிமை அல்ல. இந்த பகிடிவதைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
பல்கலைக்கழகத்திற்கு வரும் மாணவர்களின் உரிமைகளை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.இப்போதெல்லாம், பகிடிவதைகள் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் மேற்கொள்ளப்படுகின்றன.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையூறாகியுள்ள இந்த பகிடிவதைகளை நிறுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை பகிடிவதை தொடர்பில் பொறுப்பான திணைக்களம் மேற்கொள்ளவேண்டும் என நம்புகின்றேன்.” என தெரிவித்துள்ளார்.