;
Athirady Tamil News

தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தொடர்பாக அறிவித்தலில் இருக்கவில்லை – கஜேந்திரகுமார்!! (வீடியோ)

0

கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடைய செயலகத்தில் இருந்து ஒரு குறுந்தகவல் ஊடாக வருகின்ற 13ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையில் ஒரு சர்வகட்சி தலைவர்கள் உடைய கூட்டம் ஒன்றுக்கான அழைப்பு ஒன்று கிடைத்ததாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளர்.

இதுவரை கூட எழுத்து மூலமாகவோ அல்லது கடிதம் மூலமாக அறிவிக்கப்படவில்லை.இதுக்கு முதலே பல தடவைகள் எங்களுடைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி இருக்கின்றோம்.இந்த பேச்சுவார்த்தை தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பது தொடர்பாக குறித்த அறிவித்தலில் இருக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி நாடாளுமன்றத்திலும் ,வெளியிலும்,பல தடவைகள் வந்து இனப்பிரச்சினைக்கு தீர்வை எட்ட வேண்டும் என்ற கருத்தை தெரிவித்து இருந்தார். இது தவிர அது ஆக்கப்பூர்வமாக அந்த விடயம் தொடர்பாக மட்டும் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வை எட்டுவதற்கான மட்டும் நடைபெறும் பேச்சுவார்த்தையாக இது வரை அறிவிக்கவில்லை.

எத்தனையோ பேச்சுவார்த்தைகள் நடைபெற்று தோல்வி அடைந்தன.நடைபெற்ற அனைத்து பேச்சுவார்த்தையிலும் தமிழ் மக்கள் தான் ஏமாற்றம் அடைந்து இருக்கின்றார்கள்.தொடர்ந்தும் நாங்கள் இந்த பேச்சுவார்த்தையில் மக்களை ஏமாற்ற விரும்பவில்லை.ஏன் என்றால் இன்றைக்கு கிடைத்திருக்கும் சந்தர்ப்பம் சாதாரண சந்தர்ப்பம் இல்லை.

இந்த இனப்பிரச்சினையை தீர்த்து புலம்பெயர் தமிழர்களது முதலீட்டையும் நிரப்பி ஒட்டுமொத்தமாக இந்த இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவற்கு ஒரு மிகப்பெரிய தேவை ஒன்று இருப்பதால் நாங்கள் எங்களுடைய முக்கியத்துவத்தை இந்த சந்தர்ப்பத்தில் விளங்கிக் கொண்டு தமிழ் மக்களால் தெரிவு செய்யப்படவர்கள் என்ற வகையில் செயற்பட வேண்டும் என்பது தான் எங்களுடைய நோக்கம் ஆகும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த தமிழ்தேசிய கூட்டமைப்பு,விக்னேஸ்வரன் போன்ற தரப்புக்கள் நாங்கள் கூறிய அனுகுமுறையை கடைத்து இருந்தால் இந்த அரசாங்கத்துக்கு உண்மைத்தன்மையிலே சிங்கள மக்களிடம் பேசாமல் முடியாத நிலை உருவாகும்.தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர மற்ற அனைத்து தரப்புக்களும் நிபந்தனை இல்லாமல் சமஷ்டி சமஷ்டி என்று மக்களுக்கு ஒரு முகத்தை காட்டிக் கொண்டு ஒரு நிபந்தனையும் போடாமல் குந்த போகின்றார்.அந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டாடி அவர்களுக்கு தேவையான அங்கிகாரத்தை தான் குடுத்து விடுவதாகத் தான் இருக்கும்.

ஆகவே மக்கள் அனைத்தையும் விளங்கிக் கொண்டு எங்களுடைய அனுகுமுறை மட்டும் தான் இந்த அரசாங்கத்தையும் ,சிங்கள தேசத்தை இந்த நேரத்திலாவது,தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினை தீர்வு சம்பந்தமாக ஒரு ஆக்கப்பூர்வமாகவும் ,நேர்மையாகவும் நடந்து கொள்ளக்கூடிய ஒரு நிலைமை உருவாக்கும் என்ற விடயத்தையும் கூறி,இதை நாங்கள் நழுவ விட்டால், தமிழ் மக்கள் உடைய இனப்பிரச்சினை என்ற எல்லையை தாண்டி எட்டமுடியாத இடத்திற்கு கொண்டு செல்வதற்கான ஆபத்துக்கள் இருக்கின்றது.அதுக்கு முழு பொறுப்பும் இந்த பேச்சுவார்தையில் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் நடந்து கொண்ட தரப்புக்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.