பிரதேச சபை சாரதியின் மீது வாள்வெட்டு!!
முல்லைத்தீவு, முறுகண்டி பகுதியில் கடமையிலிருந்த பிரதேச சபை சாரதி ஒருவர் மீது குறிப்பிட்ட சிலர், இன்று (12) காலை வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் கீழ் உள்ள ஒலுமடு உப அலுவலகத்தில் பணியாற்றும் உழவு இயந்திரத்தின் சாரதியே வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
32 அகவையுடை மந்துவில் பகுதியில் வசித்துவரும் அன்ரன் பரமதாஸ் துசான் என்ற ஊழியரே வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில் மாங்குளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முறுகண்டிப்பகுதியில் பிரதேச சபையின் கழிவகற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மூவர் கொண்ட குழுவினர் துரத்தி துரத்தி வாளால் வெட்டியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.