;
Athirady Tamil News

இலங்கை வரலாற்றில் கடினமான காலத்திற்கு சாட்சியாக இருந்த ஆலய மறுமலர்ச்சியில் இந்தியாவின் பங்கு !!

0

இலங்கையில் மன்னாரிலுள்ள ஆலயமொன்றின் மறுமலர்ச்சியில் இந்தியா ஆற்றிய பங்கை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நினைவு கூர்ந்துள்ளார்.

இந்திய வாரணாசியின் காசி தமிழ்ச் சங்கத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற சமூகத்திலும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஆலயங்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், 12 வருடங்களாக மூடப்பட்டிருந்த மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தை இந்தியா மீட்டெடுத்தது.

எனவே நாங்கள் ஆர்வம் காட்டி முயற்சி செய்ததால், அந்த ஆலயத்தின் மறுமலர்ச்சி சாத்தியமாகியுள்ளது.

சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஐந்து புனித ஈஸ்வரங்களில் ஒன்றான திருக்கேதீஸ்வரம் துணைக்கண்டம் முழுவதும் உள்ள சைவர்களால் வணங்கப்படுகிறது.

மேலும் இந்த ஆலயம் இலங்கை வரலாற்றில் மிகவும் கடினமான காலகட்டத்திற்கு சாட்சியமாக இருந்தது.
இது ஆயுதப் போரின் போது 12 ஆண்டுகளாக மூடப்பட்டு மீண்டும் 2002இல் திறக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.