அரசாங்கத்திடம் நிதி இல்லை வடகிழக்கில் வீதி அபிவிருத்திப்பணிகள் இடை நிறுத்தம்!!
வடகிழக்கு மாகாணம் உள்ளிட்ட கொழும்பு, ஊவா ஆகிய நான்கு மாகாணங்களில் தொடர்ந்து வீதி அபிவிருத்திப்பணிகளை முன்னெடுக்க முடியவில்லை. இவ்வருடத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் சில வீதிகளைப் போக்குவரத்து மேற்கொள்வதற்கு ஏற்றதுபோல அபிவிருத்திக்கு மேற்கொள்ளவதாகவும் ஐரோட் திட்டப்பணிகள் சிலவற்றை முடிவிற்குக் கொண்டுவந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
ஆசிய அபிவிருத்தியின் கடன் நிதியானது சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் ஏற்படுத்தும் உடன்பாடு உறுதியாகக்கிடைக்கும் வரை அந்நிதி மூலம் நடைபெற்ற ஐரோட் திட்ட வீதி புனரமைப்புப்பணிகள் சிலவற்றை இடை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் சில வீதிகள் போக்குவரத்துக்கு ஏற்றவகையில் மாத்திரம் சீரமைக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.
இத்திட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெறவுள்ள உடன்படிக்கை பின்னர் ஆசிய அபிவிருத்தி வங்கி மீள வழங்க உடன்பாடு காலத்தைப் பொறுத்துத் தீர்மானிக்கப்படும். என்றும் தெரிய வருகின்றது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”