4 கால்களுடன் பிறந்த குழந்தை- அதிர்ச்சியில் டாக்டர்கள்..!!
மத்தியபிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஆர்த்தி குஷவாஹா. இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆர்த்திக்கு இன்று பெண் குழந்தை பிறந்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் குழந்தை மொத்தம் 4 கால்களுடன் பிறந்துள்ளது. அரிதினும் அரிதான நிகழ்வாக குழந்தை 4 கால்களுடன் பிறந்ததால் பெற்றோர், உறவினர்கள் டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதேவேளை, குழந்தையும், தாயும் நலமுடன் உள்ளனர். குழந்தை 2.3 கிலோ எடையுடன் நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதேவேளை, கூடுதலாக உள்ள 2 கால்கள் செயல் இழந்த நிலையில் உள்ளது. மேலும், கருமுட்டை பிரிதலின்போது ஏற்பட்ட குறைபாட்டால் குழந்தை 4 கால்களுடன் பிறந்துள்ளதாகவும், கூடுதலாக உள்ள 2 கால்களும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்படும் என்றும் டாக்டர்கள் கூறினர்.