மாற்றமடையும் ஜே.வி.பி இன் தலைவர் மற்றும் செயலாளர் பதவிகள்!!
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் மற்றும் செயலாளர் பதவிகள் மாற்றம் செய்யப்பட உள்ளன.
அந்தவகையில், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பதவியில் இருந்து அனுரகுமார திஸாநாயக்க விலக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குறித்த பதவியில் இருந்து விலக உள்ளநிலையில், புதிய தலைவராக பிமல் ரத்நாயக்க நியமிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அடுத்த பொதுத் தேர்தளுக்கு பின்னர் அனுரகுமார திஸாநாயக்க, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பதவியில் இருந்து விலக உள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, அனுரகுமார திஸாநாயக்க தேசிய மக்கள் சக்தியின் தலைவராக தொடர்ந்தும் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா, குறித்த பதவியில் இருந்து விலக உள்ளநிலையில், புதிய செயலாளராக விஜித ஹேரத் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வருகின்ற வருடங்களில் விஜித ஹேரத் பிரதான செயலாளராக நியமிக்கப்படுவார்.
இதேவேளை அடுத்த பொதுத் தேர்தளுக்கு பின்னர் அனுரகுமார திஸாநாயக்க, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பதவியில் இருந்து விலக உள்ளதாக தெரியவந்துள்ளது.