வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் உள்ளுராட்சி தேர்தல் ஒத்திவைக்கப்படலாம்!
வருகின்ற வருடம் உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடைபெறாது என தகவல் வெளியாகியுள்ளது.
அரசியல் தலைவர்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் செலவு போன்ற விடயங்களில் காணப்படும் சிக்கல் நிலைமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தேர்தல் பிரச்சாரங்களின் போது அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு மற்றும் தேர்தல் செலவை வழங்க அரசாங்கத்திடம் உள்ள நிதிப்பற்றாக்குறை போன்ற காரணங்களால் தேர்தலை நடத்துவதில் சிக்கல் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் அரசியயல்வாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மக்கள் போராட்டங்களின் விளைவாக, தேர்தல் பிரச்சாரங்களில் வேட்ப்பாளர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பில் முரணான நிலைமை காணப்படுகின்றது.
இதேவேளை, அரசினால் மேற்கொள்ளப்படும் நாளாந்த செயற்பாடுகளுக்கே நிதி இல்லாதநிலையில், குறித்த தேர்தலுக்காக செலவழிப்பதற்கு பெருந்தொகை பணம் அரசிடம் இல்லை.
ஆகவே, அரசியல்வாதிகளின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் செலவு போன்ற காரணங்களினால் உள்ளுராட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் தேர்தல் ஒத்திவைக்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது.