இலங்கை இந்திய வர்த்தகத்தில் பயன்படுத்தப்படவுள்ள இந்திய ரூபா; இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி!
இந்தியாவுடன் மேற்கொள்ளும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு இலங்கை போன்ற நாடுகள் இந்திய ரூபாவை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த அனுமதியை இந்திய ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது.
டொலர் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் இலங்கை போன்ற நாடுகளுக்கு தீர்வாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரௌட்டர் (routers) செய்திச் சேவை தெரிவித்துள்ளது. குறித்த நடவடிக்கைகளுக்கு அமைய இந்திய வங்கிகள் இலங்கையில் ஐந்து இந்திய ரூபா கணக்குகளை திறப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளன.
இதேபோன்று ரஷ்யா மற்றும் மொரீஷியஸ் நாடுகளிலும் கணக்கினை திறக்க அனுமதி வழங்கியுள்ளது. வர்த்தக நடவடிக்கைகளுக்கு இந்தியா ரூபாவை பயன்படுத்தும் பொறிமுறைக்குள் கொண்டுவர தஜிகிஸ்தான், கியூபா, லக்ஸம்பர்க் மற்றும் சூடான் ஆகிய நாடுகளுடன் இந்தியா பேசி வருவதாக ரௌட்டர்ஸ் மேலும் தெரிவித்துள்ளது. இந்திய ரூபாவைப் பயன்படுத்தி வர்த்தகம் இடம்பெறும்போது இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் இன்னும் வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்திய ரூபா இலங்கையில் புழக்கத்தில் வரும் என மக்கள் பயம் கொள்ளத் தேவை இல்லை என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.