;
Athirady Tamil News

ஆந்திராவில் தமிழக காட்டு யானை மின்சாரம் தாக்கி பலி..!!

0

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வனச்சரகம் ஆந்திர வனப்பகுதியில் காட்டு யானை கூட்டம் ஒன்று சுற்றி தெரிகிறது. கடந்த வாரம் தமிழகத்திற்குள் இருந்தது. காட்டு யானைகள் ஆந்திர வன பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டன. சித்தூர் மாவட்ட வனப்பகுதிகளில் இந்த யானைகள் கூட்டமாக சுற்றி திரிகின்றன. இந்த கூட்டத்தை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் யானை நேற்று தனது கூட்டத்தை விட்டு தனியாக பிரிந்து சென்றது, சித்தூரில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ள பங்காருபாலம் மண்டலம், கோடலமடுகு கிராமத்தில் உள்ள விவசாய நிலத்திற்குள் அந்த யானை சென்றது. நெல் வயலில் புகுந்த பெண் யானை, அங்குள்ள மின் மோட்டாரின் கம்பிகளை இழுக்க முயன்றது. மின் கம்பிகள் வாயில் சிக்கியதால் மின்சாரம் தாக்கி யானை இறந்தது. இதுபற்றி தகவலறிந்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். கால்நடை மருத்துவர்கள் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரேத பரிசோதனை செய்தனர். கிராம மக்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். யானை உடலை வயலில் புதைத்து, இறுதிச்சடங்கு செய்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.