;
Athirady Tamil News

அயோத்தியில் ராமர் கோவில் பணி, போர்க்கால அடிப்படையில் நடைபெறுகிறது- யோகி ஆதித்யநாத்..!!

0

இந்திய சுற்றுலா ஆபரேட்டர்கள் சங்கத்தின் 37வது ஆண்டு விழா மாநாடு உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளதாவது: கடந்த ஐந்து ஆண்டுகளில் எனது அரசு மேற் கொண்ட முயற்சிகளால் உள்நாட்டு சுற்றுலாவில் உத்தரபிரதேசத்தை முதலிடத்திற்கு கொண்டு வந்துள்ளது. உலகின் மிகப் பழமையான நகரமான காசி இந்தியாவின் கலாச்சார மற்றும் ஆன்மீகத் தலைநகரமாக உள்ளது. ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவில் வளாகம் திறக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. முன்பு வழக்கமாக வாரணாசிக்கு வருடத்திற்கு ஒரு கோடி சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். ஆனால், இந்த ஆண்டு வாரணாசிக்கு கடந்த மாதத்தில் மட்டும் ஒரு கோடி சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். அயோத்தி நம்பிக்கையின் மையமாக உள்ளது. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது இங்கு வர விரும்புகின்றனர். அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. அத்துடன் அயோத்தியில் சுற்றுலா வளர்ச்சிக்காக பல பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2024 ஆண்டில் இந்த பணிகள் முடிவடையும் போது, இந்த நகரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரிக்கும், அதே போல் உள்நாட்டினராக இருந்தாலும், வெளிநாட்டினராக இருந்தாலும் மக்கள் மதுராவுடன் தொடர்பு கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.