திருவெம்பாவையை முன்னிட்டு யாழ் பல்கலை மாணவர்களிடையே போட்டிகள்!! (படங்கள்)
திருவெம்பாவையை முன்னிட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினரால் சைவ சமய கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் போட்டிகள் பல்கலைக்கழக மாணவர்களிடையே ஞாயிற்றுகிழமை (18) நடாத்தப்பட்டது.
2020 ஆம் ஆண்டு முதல் யாழ் பல்கலைக்கழக மாணவர்களினால் திருவெம்பாவையோதல் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இவ்வருடம் மாணவர்களிடையே ஆன்மிக கலாசார விழுமியங்களை வெளிக்கொணரும் முகமாக குறித்த போட்டிகள் நடாத்தப்பட்டுள்ளன.
இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
திருவெம்பாவை விரத காலத்தில் மார்கழி பெருவிழா எனும் தொனிப்பொருளில் மாணவர்களால் சைவசமய ஆன்மீகம் சார்ந்த நிகழ்வுகள் இடம்பெற்று வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைககப்படவுள்ளன.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”