;
Athirady Tamil News

பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கலும் சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு!! (படங்கள், வீடியோ)

0

DArk Foundation, Sri Lankaவின் 1.5 மில்லியன் நிதியில் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கலும் சாதனையாளர்கள் கௌரவிப்பும் சாய்ந்தமருது தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது.

திங்கட்கிழமை (19) மாலை கல்முனை கல்வி வலயத்திற்க்குட்பட்ட 28 பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 300 ற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான இலவச பாடசாலைப் பாதணிகள் டாக்(DArk) பவுண்டேஷன் அமைப்பினரால் வழங்கப்பட்டதுடன் சாதனையாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

குறித்த நிகழ்வில் பவுண்டேஷன் நிறுவுனர் டாக்டர் அர்ஷாத் காரியப்பர் தலைமை தாங்கியதுடன் கிழக்கு மாகாண கணனி தொழில்நுட்ப பேரவை பணிப்பாளரும், அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளருமான யூ.எல்.என். ஹுதா உமரின் நெறிப்படுத்தலில் சிறப்பாக நடைபெற்றது.

அதிதிகள் கலாச்சார அம்சங்களுடனான முறையில் வரவேற்கப்பட்டு இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் எச். எம்.எம் ஹரிஸ் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ். சஹதுல் நஜீம் கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம் எம் ஆஷிக் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் உதவிக்கல்வி பணிப்பாளர் நஸ்மியா சனூஸ், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், கல்முனை வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், பிரதேச பாடசாலை அதிபர்கள் மற்றும் பிரதி அதிபர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், பொது அமைப்புக்களின் பிரதானிகள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்

அத்துடன் நிகழ்வில் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் சாதனை படைத்த மாணவர்களும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதுடன் இந்நிகழ்வில் மாணவர்கள் தற்போதைய சூழ்நிலையில் குடும்பச் சூழலில் இருந்து பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டு பொருளாதார நெருக்கடிஇ உணவு நெருக்கடி என பல்வேறுபட்ட நெருக்கடிகளுடன் பாடசாலைக்கு வருகை தருகின்றனர். இவர்களை மிக அவதானமாக கையாள வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டதுடன் போதைப்பொருளின் தாக்கங்கள் தொடர்பில் மாணவர்களுக்கு விளக்கவுரைகள் அதிதிகளால் நிகழ்த்தப்பட்டன.

அத்துடன் இவ் அமைப்பினர் பல்வேறு மக்கள் நலன்சார்ந்த விடயங்களுடன் கல்விக்காகவும் பல்வேறு செயற்றிட்டங்களை கடந்த பல வருடங்களாக நடைமுறைப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இது தவிர தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உலர் உணவு விநியோகம் விசேட தேவை உடையோர் மற்றும் நோயாளிகளுக்கான உதவிகள்இகுழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்கு உணவு வழங்கள் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் இபயன் தரு மரக்கண்டுகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் ஏற்கனவே இவ்வமைப்பு வழங்கியுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.